செய்திகள்

அம்மன் கோயில்களில் ஆடித் திருவிழா

DIN

ஆம்பூர் கற்பகம் கூட்டுறவு மண்ணெண்ணெய் விற்பனை நிலைய வளாகத்தில் அமைந்துள்ள நாகசக்தி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளி விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, நாகசக்தி அம்மன் புற்றுக்கு அபிஷேக, சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
வடசேரி துர்கையம்மன், பெரிய நாச்சியம்மன் கோயிலில்

ஆம்பூர் அருகே வடசேரி துர்கையம்மன் மற்றும் பெரிய நாச்சியம்மன் கோயிலில் ஆடி 4-ஆம் வெள்ளி விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, பக்தர்கள் பங்கேற்ற 308 பால்குட ஊர்வலம் கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. தொடர்ந்து, மூலவருக்கு பால்குட அபிஷேகம், ராகுகால பூஜை ஆகியவை நடைபெற்றன.
இதையடுத்து மாலையில் மூலவருக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம், மகா தீபாராதனையும் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

படவேட்டம்மன் கோயிலில் 1008 பால் குடம் ஊர்வலம்
 வாலாஜாபேட்டை- சோளிங்கர் சாலையில் உள்ள படவேட்டம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி 1008 பால் குட ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வன்னிவேடு பாலாற்றுப் பகுதியில் இருந்து புறப்பட்ட பால் குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. இதைத் தொடர்ந்து படவேட்டம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT