செய்திகள்

விறுவிறுப்படைந்த விநாயகர் சிலை விற்பனை

DIN

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருத்தணி பகுதியில் விநாயகர் சிலைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வரும் 25-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு திருத்தணி, கே.ஜி.கண்டிகை பகுதிகளில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வந்து குவிந்துள்ளன. ஆந்திர மாநிலம் சித்தூர், நகரி, புத்தூர், ரேணிகுண்டா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விதவிதமான விநாயகர் சிலைகள் லாரி, வேன்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன.
விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில் விற்பனை சூடுபிடித்துள்ளது. திருத்தணி பெரியார் நகரில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, விற்பனை நடைபெற்று வருகிறது. திருத்தணி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராம மக்கள் இங்கு வந்து விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர்.
ரூ. 500 முதல் ரூ.15,000 வரை பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. திருத்தணி பெரியார் நகரில் மட்டும், கடந்த ஒரு மாதத்தில் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விற்பனையாளர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT