செய்திகள்

பிருத்தியங்கிரா தேவி கோயிலில் மகா நிகும்பலா யாகம்

தினமணி

ராணிப்பேட்டை மகா பிருத்தியங்கிரா தேவி கோயிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி, மகா நிகும்பலா யாகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோயில் பரம்பரை அறங்காவலர் பி.எஸ்.மணி தலைமையில் இரவு 7 மணியளவில் மகா கணபதி ஹோமத்துடன் மகா யாகம் தொடங்கியது. தொடர்ந்து, மகா சுதர்சன யாகம், மகா சண்டி யாகம், மகா வாராகி யாகம், பகளாமுகி யாகம் உள்ளிட்ட 21 வகையான சிறப்பு யாகங்கள் நடைபெற்றன.
பின்னர் மகா யாகத்தின் முடிவில் நள்ளிரவு 12 மணியளவில் சிறப்பு மகா நிகும்பலா யாகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.
இதில், ராணிப்பேட்டை சுற்று வட்டாரம் மற்றும் ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகா பிருத்தியங்கிரா தேவியை வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT