திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 31) திருப்புகழ் திருப்படி திருவிழா நடைபெறுகிறது.
ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் திருப்புகழ் திருப்படி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தாண்டு திருப்புகழ் திருப்படி திருவிழா டிசம்பர் 31-ஆம் தேதி நடைபெறுகிறது.
காலை 8 மணிக்கு சரவணப்பொய்கை முதல் மலைப்படியில் முருகன் கோயில் இணை ஆணையர் செ. சிவாஜி, கோயில் தக்கார் வே. ஜெயசங்கர், மற்றும் எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன், எம்.பி. திருத்தணி கோ.அரி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி பூஜைகளை தொடங்கி வைக்கின்றனர். தொடர்ந்து, கோயில் நிர்வாகம் சார்பில் 365 படிகளிலும் தேங்காய் உடைத்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளன.
காலை 11 மணிக்கு மலைக்கோயில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் முருகப் பெருமான் திருவீதி உலா வந்து அருள்பாலிக்கிறார். விழாவில் 100-க்கும் மேற்பட்ட பஜனைக் குழுவினர் மலைக்கோயிலில் அமர்ந்தவாறு பக்திப் பாடல்களைப் பாடி முருகப் பெருமானை வழிபடுகின்றனர்.
டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு முருகன் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி, தக்கார் வே.ஜெயசங்கர் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.