முகப்பு
செய்திகள்

அஷ்டபுஜபெருமாள் கோயிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு

காஞ்சிபுரம் அஷ்ட புஜ பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

காஞ்சிபுரம் அஷ்ட புஜ பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. 
காஞ்சிபுரத்தில் உலக பிரசித்திப் பெற்ற அஷ்ட புஜ பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில், 75- ஆவது திவ்யதேச கோயிலாக விளங்குகிறது. இக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வை முன்னிட்டு, வியாழக்கிழமை காலை முதலே கோயில் நிர்வாகத்தினர் விழா ஏற்பாடுகளைச் செய்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் உற்சவர் வடக்கு வாசல் வழியாக எழுந்தருளுகிறார். 
விழாவை முன்னிட்டு, பெருமாள் கோயிலுக்குச் செல்லும் வழியில் 130-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதவாறு தீயணைப்பு வாகனம், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்துப் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதுபோல், வைகுண்ட பெருமாள், வரதராஜ பெருமாள், பாண்டவ பெருமாள், விளக்கொளி பெருமாள், அழகிய சிங்கப் பெருமாள், உலகளந்த பெருமாள் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →