செய்திகள்

கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது; வடலூரில் இன்று தைப்பூச ஜோதி தரிசனம்

தினமணி

கடலூர் மாவட்டம், வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழு திரைகளை நீக்கி தைப்பூச ஜோதி தரிசன நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசனத்தைக் காண லட்சக்கணக்கானோர் வடலூர் வருவர். நிகழாண்டின், 146-ஆவது தைப்பூச ஜோதி தரிசன விழா, புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக, அதிகாலை 5 மணியளவில் வள்ளலாரின் அகவல் பாராயணம் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், 7.30 மணிக்கு தரும சாலையில் சன்மார்க்கக் கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரியச் செய்த கருங்குழி ஆகிய இடங்களில் கொடியேற்றப்பட்டது.
அப்போது, சத்திய ஞான சபைக்கு இடம் வழங்கிய பார்வதிபுரம் கிராம மக்கள், பல்வேறு வகையான பழங்கள், சீர்வரிசைப் பொருள்களை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எடுத்துக்கொண்டு ஊர்வலமாகக் கொடி மரம் அருகே வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, 10.30 மணியளவில் "அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி, தனிப் பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி' என்ற வள்ளலாரின் பாடலை அங்கு கூடியிருந்தவர்கள் பாடினர். பின்னர், கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.
இன்று ஜோதி தரிசனம்: விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச ஜோதி தரிசனம் வியாழக்கிழமை (பிப். 9) நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனமும், தொடர்ந்து காலை 10 மணி, நண்பகல் ஒரு மணி, இரவு 7 மணி, 10 மணி, வெள்ளிக்கிழமை (பிப். 10) காலை 5.30 மணி என ஆறு காலங்களில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். விழாவைக் காண வரும் பக்தர்களுக்காக மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத் துறை இணைந்து பல்வேறு வசதிகளைச் செய்துள்ளது. பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT