செய்திகள்

திருச்செந்தூர் கோயிலில் வருஷாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

DIN

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இத்திருக்கோயிலில் மூலவரான சுப்பிரமணியர் தை மாதம் உத்திர நட்சத்திரத்தில்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டார். எனவே, ஆண்டுதோறும் தை மாதம் உத்திர நட்சத்திரத்தன்று வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. நிகழாண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
அதன்பின்னர் பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, காலை 9.05 மணிக்கு மூலவர், சண்முகர், வெங்கடாசலபதிக்கு ஒரே நேரத்திலும், தொடர்ந்து வள்ளி, தெய்வானைக்கும் விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இரவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல், புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் அம்பாளுடன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் ப.தா. கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் தா. வரதராஜன், அலுவலக கண்காணிப்பாளர் கோ. ராமராஜன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொத்தகாலன்விளையில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருச்செந்தூரில் மௌன சுவாமி குருபூஜை

பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

குவாரி உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி: கேரள இளைஞா் கைது

பழையகாயலில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT