செய்திகள்

ஆடி அமாவாசை: கோயிலில் குவிந்த பக்தர்கள்

தினமணி

ஆடி அமாவாசையையொட்டி, திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் சனிக்கிழமை இரவு முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இரவு தங்கி, ஞாயிற்றுக்கிழமை காலை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் அமாவாசைதோறும் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கோயில் வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு தங்கி காலையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து குளத்தில் நீராடிச் செல்வது வழக்கம்.
ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை என்பதால் சனிக்கிழமை இரவு முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம், சென்னை, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து திருவள்ளூரில் தங்கினர்.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலையில் பக்தர்கள் முன்னோர்களுக்கு கோயில் குளத்தில் தர்ப்பணம் செய்தனர்.
சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் அதிகளவில் வாகனங்களில் வந்திருந்ததால் திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT