செய்திகள்

கோயில்களில் ஆடிப்பூரத் திருவிழா

தினமணி

ஆடிப்பூர விழாவையொட்டி, செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள கோயில்களில் அம்மனுக்கு புதன்கிழமை வளைகாப்பு விழா நடைபெற்றது.
செங்கல்பட்டு வ.உ.சி. தெருவில் உள்ள காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அம்மனுக்கு திருப்பாவாடை எனும் மகா நைவேத்திய வைபவ உற்சவம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற வளைகாப்பு விழாவையொட்டி, அம்மனுக்கு வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு, ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் செங்கல்பட்டு அண்ணாநகரில் உள்ள ரத்தின விநாயகர் கோயிலில் துர்கையம்மனுக்கும், சொர்ணாம்பிகை அம்மனுக்கும் வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
அண்ணாநகர் எல்லையம்மன் கோயிலில் மூலவர், உற்சவர் அம்மனுக்கு ஆண்டாள் அலங்காரத்தில் வளைகாப்பு நடைபெற்றது. பெரியநத்தம் கைலாசநாதர் கோயில், ஓசூரம்மன் கோயில், மேட்டுத்தெரு செங்கழுநீர் விநாயகர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஆடிப்பூர உற்சவம் நடைபெற்றது.
இதேபோல் திருவடிச்சூலம் கோயில்புரத்தில் அமைந்துள்ள 51 ஆடி உயரமுள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில் உற்சவர் அம்மனுக்குஆடிப்பூர வளைகாப்பு உற்சவம் நடைபெற்றது. திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். மேலும் முருகன், வள்ளி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
ஆடிப்பூர விழாவையொட்டி பெண்கள் அனைத்துக் கோயில்களிலும் வளையல்களை வாங்கிக் கொடுத்து அம்மனை தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT