செய்திகள்

அனுமந்த வாகனத்தில் பவனி வந்த கோவிந்தராஜர்

DIN

திருப்பதி கோவிந்தராஜ சாமி கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான திங்கள்கிழமை, உற்சவர் கோவிந்தராஜர் ராம அவதாரத்தில் அனுமந்த வாகனத்தில் பவனி வந்தார்.
திங்கள்கிழமை காலை 7 மணி முதல் 8.30 மணிவரை அனுமந்த வாகன சேவை நடைபெற்றது. இதனைக் காண மாடவீதியில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
திருமஞ்சனம்: மாடவீதியில் பவனி வந்த களைப்பை போக்க காலை 9.30 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ சாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.
பின்னர், மாலை 4 மணி முதல் 5 மணி வரை வசந்தோற்சவம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாட வீதியில் உற்சவர் கோவிந்தராஜர், தன் உபய நாச்சியார்களுடன் தங்கப் பல்லக்கில் பவனி வந்தார்.
இரவு 8 மணி முதல் 9.30 மணிவரை யானை வாகன சேவை நடைபெற்றது. இதில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். வாகன சேவையின் முன்னும், பின்னும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT