செய்திகள்

சின்னசேஷ வாகனத்தில் வலம் வந்த கோதண்டராம சுவாமி

தினமணி

திருப்பதி கோதண்டராம சுவாமி கோயிலில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி வலம் வந்தார்.
திருப்பதியில் உள்ள கோதண்டராம சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் சனிக்கிழமை தொடங்கியது. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை சின்னசேஷ வாகனத்தில் கோதண்டராமர் கையில் வில் ஏந்தி மாடவீதியில் வலம் வந்தார்.
மாடவீதியில் பவனி வந்த களைப்பை போக்க காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6 மணி முதல் 7 மணி வரை கோயில் வளாகத்தில் ஊஞ்சல் சேவையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை அன்னப்பறவை வாகன சேவையும் நடைபெற்றது. இதில் திருமலை ஜீயர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக கோயிலில் அமர்ந்து ஸ்ரீராமஜெயம் எழுதும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கப்பட்டது. பிரம்மோற்சவ சமயத்தில் கோடிமுறை ஸ்ரீராமஜெயம் எழுதி, அதை ராமருக்கு சமர்ப்பிக்கும் வழக்கம் கோயிலில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதற்காக கோயில் வளாகத்தில் பலகைகள், பேனா, பேப்பர் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இதில் பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீராமஜெயம் எழுதி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயில் அதிகரிப்பு: கால்நடைகள் மேய்ச்சல் நேரத்தை மாற்ற அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை மையம் அருகில் ட்ரோன்கள் பறக்க தடை: ஆட்சியா்

வெப்ப அலை.. கவனம்!

பறவை காய்ச்சல்: தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

திருச்செங்கோட்டில் ரூ. 1.56 கோடிக்கு மஞ்சள் ஏலம்

SCROLL FOR NEXT