முகப்பு
செய்திகள்

உலக நன்மைக்கு ஹோமம்: லதா ரஜினிகாந்த் பங்கேற்பு

உலக நன்மைக்காக காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற ஹோமத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா திங்கள்கிழமை கலந்துகொண்டார். 

Updated On : 10 ஏப்ரல், 2018 at 12:41 AM
காமாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற ஹோமத்தில் கலந்துகொண்ட லதா ரஜினிகாந்த்.
பகிர்:

உலக நன்மைக்காக காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற ஹோமத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா திங்கள்கிழமை கலந்துகொண்டார். 
காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் உலக நன்மைக்கென கடந்த 9ஆம் தேதி முதல் வரும் 18ஆம் தேதி வரை பல்வேறு வகையான ஹோமங்கள் நடத்தப்படவுள்ளன. அதன்படி, கோயில் ஸ்தானிகர் நடராஜசாஸ்திரி தலைமையில் தக்ஷிணகாளி ஹோமம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது. இதில், நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் கலந்துகொண்டு வழிபட்டார். அதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
உலக நன்மைக்காக நடத்தப்படும் ஹோமத்தில் கலந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது, தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகின்றன. எனவே, உலக நன்மைக்கென நடத்தப்பட்ட ஹோமத்தில் தமிழக மக்களின் பிரச்னைகள் தீர்ந்து அமைதி நிலவ வேண்டும் என்று பிரார்த்தித்தேன். 
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. இது தொடர்பாக அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்றார் லதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.