செய்திகள்

பத்மாவதி பரிணய உற்சவம் நிறைவு

தினமணி

திருமலையில் நடைபெற்று வந்த பத்மாவதி பரிணய உற்சவம் வியாழக்கிழமையுடன் நிறைவு பெற்றது.
 திருப்பதி ஏழுமலையானுக்கும் பத்மாவதி தாயாருக்கும் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தை தேவஸ்தானம் திருமலையில் 3 நாள்கள் பரிணயோற்சவமாக நடத்தி வருகிறது.
 அதன்படி, திருமலையில் பத்மாவதி பரிணயோற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அதன் நிறைவு நாளான வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி கருட வாகனத்திலும், ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்கள் தங்கப் பல்லக்கிலும் கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருளினர்.
 பின்னர், அவர்களுக்கு திருமலை ஜீயர்கள் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து, தீப தூப ஆராதனை செய்து, அவர்கள் இருவரையும் ஊஞ்சலில் அமர வைத்து ஊஞ்சல் சேவை நடத்தினர். அதன்பின் இரவு அவர்கள் இருவருக்கும் மாலை மாற்றி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
 இதையடுத்து, ஹோமம் வளர்த்து, பூர்ணாஹுதி நடத்தி திருமண உற்சவத்தை நிறைவு செய்தனர். எப்போதும் பத்மாவதி பரிணய உற்சவத்தின் நிறைவு நாளின்போது திருமலையில் இரவு வண்ண வாண வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.
 ஆனால் கேரள மாநிலத்தில் கோயிலில் வாணவேடிக்கை நடத்திய போது, நிகழ்ந்த வெடி விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பொதுமக்கள் கூடும் கோயில் விழாக்களின்போது, வாண வேடிக்கை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்து, உத்தரவிட்டது. இதனால் திருமலையில் வாண வேடிக்கை நடத்துவதை தேவஸ்தானம் கைவிட்டது குறிப்பிடத்தக்கது. கல்யாண உற்சவம் நிறைவு பெற்றபின், உற்சவ மூர்த்திகள் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டனர்.
 இந்த உற்சவத்தில் தேவஸ்தான அதிகாரிகள், திருமலை ஜீயர்கள் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT