முகப்பு
செய்திகள்

நாடு முழுவதும் புத்த பூர்ணிமாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

புத்த பூர்ணிமா திருநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. சித்ரா பவுணர்மி தினத்தன்று புத்தர் ஞானம் பெற்றார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

புத்த பூர்ணிமா திருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சித்ரா பவுணர்மி தினத்தன்று புத்தர் ஞானம் பெற்றார். இந்தத் தினம் புத்த பூர்ணிமா விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

கௌதம புத்தர் பிறந்து 2,500 வருடங்கள் கடந்தும் ஞானோதயம் அடைந்த அவரின் போதனைகள் மக்களிடையே இன்றும் வழி நடத்துகிறது. வைசாக மாதத்தில் கொண்டாடப்படும் புத்த பூர்ணிமா கௌதம புத்தரின் பிறப்பு, ஞானோதயம் மற்றும் மஹா சமாதி ஆகிய நாட்களை நமக்கு நினைவுபடுத்துகிறது. 

புத்த பூர்ணிமா திருநாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பௌத்த கோயில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். 

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் பூத்த பூர்ணிமா தினத்தை முன்னிட்டு கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →