செய்திகள்

நீங்கள் எந்த ராசி? உங்களுக்கு எப்படிப்பட்ட துணை அமையும்!

தினமணி

பெண்கள் அனைவரும் தனக்கு வரப்போகும் துணையைப் பற்றி ஒரு பட்டியலே போட்டு வைத்திருப்பார்கள். அந்தவகையில் எந்த ராசிக்கார பெண்களுக்கு எப்படிப்பட்ட துணை அமையும் என்று பார்ப்போம். 

மேஷ ராசிக்காரர்கள் புதுமையை விரும்புபவர்கள். எனக்கு நானே முதலாளி என்ற வகையில் செயல்படுவார்கள். உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இவர்கள் தன் வாழ்க்கைத் துணையின் மேல் அதிக அக்கறை காட்டுவார்கள். 

ரிஷப ராசிக்கார்கள் காதலை உணரக்கூடியவர்கள். காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இவர்களிடம் இருக்கும் ஒரு நல்ல பழக்கம்.. பளிச்சென்று எதையும் யோசிக்காமல் மனதில் பட்டதை பேசிவிடுவார்கள். இந்த ராசி ஆண்களிடம் விட்டுக் கொடுத்து சென்றால் வாழ்க்கை சிறப்பாக அமையும். 

மிதுன ராசிக்காரர்கள் மிகவும் சுவாரஸ்யமான பண்புகளைக் கொண்டவர்கள். இவர்களது நட்பு வட்டாரம் கொஞ்சம் பெரியது தான். இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத செயல்களை செய்து காதலியை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள்.

கடக ராசிக்காரர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்கள். இவர்களது துணையிடத்தில் மிகவும் அன்பாக நடந்து கொள்வார்கள். இயல்பாகவே மற்றவர்களிடத்தில் அன்பு செலுத்தும் குணம் உள்ளவர்கள் என்பதால், தன் துணையின் குடும்பத்தையும் சிறப்பாக பார்த்துக் கொள்ளக்கூடியவர்கள்.

சிம்ம ராசிக்கார ஆண்கள் மேன்மையானவர்கள். யார் கருத்து சொன்னாலும் அதை ஏற்றுக்கொண்டாலும், அதில் ஏதேனும் அர்த்தம் இருக்குமோ என்று யோசிப்பவர்கள். அதிக தன்னம்பிக்கை கொண்ட இவர்கள் தன் துணையே எந்த வகையிலும் மற்றவர்களிடம் விட்டுக்கொடுக்காமல் பேசும் குணம் கொண்டவர்கள். தன் காதலை அடிக்கடி வெளிப்படுத்தி மனைவியை மகிழ்ச்சிப்படுத்துபவர். 

கன்னி ராசிக்கார ஆண்கள் எதிலும் சரியாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள். இவர்கள் நம்பிக்கை, அமைதி, பகுப்பாய்வு, அறிவுத்திறன் ஆகிய
அனைத்திலும் சிறந்து விளங்குபவர். தன் துணையின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய பேச்சுத்திறன் மற்றவர்களைக் கவரும் வகையில் இருக்கும். 

துலா ராசிக்காரர்கள் மிகவும் பொறுமையானவர்கள். எதிலும் ஆழ்ந்து சிந்திக்கக்கூடியவர்கள். தன் மனைவிக்கு அவ்வப்போது பல ஆச்சரியங்களைக் கொடுத்து கொண்டே இருப்பார்கள். மற்றவர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கும் இவர்கள், எப்படிப்பட்டவர்களுடனும் சேர்ந்து பயணிக்கும் குணம் கொண்டவர். 

விருச்சிக ராசிக்கார ஆண்கள் எளிதில் உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள். எந்தக் காரியத்திலும் கண்ணும் கருத்துமாக செயல்படக்கூடிய இவர்கள் தன் காதல் மனைவியை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

தனுசு ராசிக்காரர்கள் காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இவர்களுக்குப் புதுமையான செயல்களை செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்ட இவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையுடன் செயல்படுவார்கள். தனிமையை விரும்புபவர்கள். வாழ்வில் நிறைய சாகசங்களை செய்ய நினைப்பவர்கள். 

மகர ராசிக்காரர்கள் தங்களது துணைக்கு பிடித்தமான ஒரு துணையாக இருப்பார்கள். இவர்களுக்கு ஆசைகள் ஏராளமாக இருக்கும். தன் துணையின் மீது அதிக அக்கறை வைத்திருப்பார்கள். குறிக்கோளுடன் செயல்படும் இவர்கள் எந்த விஷயமாக இருந்தாலும் அதில் ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா என்று எதிர்பார்ப்பவர்கள். 

கும்ப ராசிக்கார ஆண்கள் மற்றவர்களை நன்கு எடைபோடுபவர்கள். இவர்கள் பெண்களை மதிப்பவர். தன்னை நம்பி வந்த துணையை கடைசி வரை கருத்தாக இருந்து காப்பாற்றுவார்கள். நிறையத் திறமைகள் இவர்களிடத்திடத்தில் இருக்கும். 

மீன ராசிக்கார ஆண்கள் அனேக சொந்தங்கள் இருந்தாலும் தணிந்து நின்று வாழ்க்கையில் போராடக்கூடியவர்கள். இவர்கள் அனைவரையும் விட தனக்கு அமையும் மனைவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். துணையுடன் கழிக்கும் ஒவ்வொரு நாளையும் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாற்றுவார்கள். அதீத கற்பனை திறன் கொண்டவர்கள். 

இது, ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் பொதுவான பலன்களே தவிர அவரவர் தசாபுத்தி, பாவ-புண்ணியத்திற்கு ஏற்ப வாழ்க்கைத்துணை அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT