செய்திகள்

புனித சூசையப்பர் ஆலய பெருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

தினமணி

வேட்டவலம் மலை மீதுள்ள புனித சூசையப்பர் ஆலய ஆண்டுப் பெருவிழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் புனித சூசையப்பர் ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான பெருவிழா கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் ஆலயத்தில் திருப்பலிப் பூஜைகள் நடைபெற்று வந்தன.
நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு பாதிரியார் ஜோ.லூர்துசாமி தலைமையில், அருளப்பன், ராஜரத்தினம் உள்பட 20-க்கும் மேற்பட்ட குருமார்கள் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி பாடல் பூஜைகளை நடத்தினர்.
காலை 9 மணிக்கு உறங்கும் நிலை புனித சூசையப்பர் சொரூபம் திறந்து வைக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு புனித சூசையப்பர் தேர் பவனி கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் கிறிஸ்தவ சமுதாயத் தலைவர் சவரிமுத்து, சூசையப்பர் பேரவைத் தலைவர் மைக்கேல், செயலர் துரை.அந்தோனிசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

SCROLL FOR NEXT