செய்திகள்

நாகை செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

நாகை அருள்மிகு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி (கூடாரை வெல்லும்) சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட 108 வைணவத் தலங்களுள் 19 -ஆவது தலமாக, நாகை அருள்மிகு செளந்தரராஜப் பெருமாள் கோயில் விளங்குகிறது. வைணவத் தலங்களில் மார்கழி மாத முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாக நடைபெறும் கூடாரவல்லி விழா இக்கோயிலில் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஸ்ரீஆண்டாள், திருப்பாவையின் 27 -ஆவது பாசுரமான 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' என்ற பாசுரத்தைப் பாடியபோது, ஆண்டாளுக்கு திருமண வரம் அளித்த பெருமாள், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீதேவி, பூதேவி, செளந்தர்ய மகாலெட்சுமி தாயாருடன் ஏக சிம்மாசனத்தில் காட்சியளித்தார் என்ற ஐதீக அடிப்படையில் இந்த விழா நடைபெற்றது.
ஸ்ரீஆண்டாளின், 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' என்ற பாசுரம் பாடப்பட்டு, ஸ்ரீ ஆண்டாள் சர்க்கரைப் பொங்கலில் சிறப்பாக நெய் கலந்து பெருமாளுக்கு நிவேதனம் செய்தார் என்ற ஐதீக அடிப்படையில், மிகுதியாக நெய்யிடப்பட்ட சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அருள்மிகு செளந்தரராஜப் பெருமாள் செளந்தர்யவல்லித் தாயார், ஆண்டாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் ஏக சிம்மாசனத்தில் முத்தங்கியில் சேவை சாதித்தார். நாகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த திரளானோர் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT