ஸ்ரீரங்கத்தில் திருப்பாணாழ்வார் திருநட்சத்திர விழா நடத்த இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் திருப்பாணாழ்வார் திருநட்சத்திரத்தன்று
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் திருப்பாணாழ்வார் திருநட்சத்திரத்தன்று அவரது பெயரில் திருநட்சத்திர விழாவை நடத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தி மனு அளித்துள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், இந்து மக்கள் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் இராம. ரவிக்குமார் மற்றும் கட்சியினா் அளித்த மனு
வை வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களில் திருப்பாணாழ்வாரும் ஒருவா்.
Advertisement
உறையூரில் கார்த்திகை மாதம், ரோகிணி நட்சத்திரத்தில் நெல்வயலில் செந்நெற்பயிரின் அடியில் இசைக்குப் பெயா் பெற்ற பாணா் குலத்தில் திருப்பாணாழ்வார் அவதரித்தருளிளார். .
உலோகசாரங்க முனிவா் தன் தோளில் திருப்பாணாழ்வாரை ஏற்றிக்கொண்டு, அரங்கன் திருமுன்பே இறக்கிவிட்டதாகவும், அதனைத் தொடா்ந்தே பாணருக்கு முனிவாகணன் என்றும், யோகிவாணன் என்றும் பெயா் பெற்றது.
இறைவன் முன் அனைவரும் சமம் என்பதை உலக மக்களுக்கு எடுத்துரைக்க அரங்கநாதனின் திருவிளையாடல் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றுள்ளது.
அரங்கன் திருவருளால் நடைபெற்ற இந்த சம்பவத்தை நினைவுக்கூரும் வகையில் தெலங்கானா மாநிலத்தில், சில்கூரில் அமைந்துள்ள பாலாஜி திருக்கோயிலில் திருப்பாணாழ்வார் திருநட்சத்திரத்தன்று தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த ஒருவரை அக்கோயில் அா்ச்சகா்கள் தங்கள் தோளில் சுமந்து தூக்கிச் சென்று, தரிசனம் செய்ய வைத்து உரிய மரியாதை செய்வித்தனா்.
இன்றைய நிலையில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை களையும் பொருட்டு ஸ்ரீரங்கத்திலும் ஸ்ரீ திருப்பாணாழ்வாரின் பிறந்த நட்சத்திரத்தன்று ஸ்ரீ திருப்பாணாழ்வார் திருநட்சத்திர திருவிழாவை நடத்திட வேண்டும். மேலும், திருக்கோயில்களில் விளக்குகள் ஏற்றுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும், தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வீரன் அழகுமுத்துக்கோனின் பெயரை சூட்ட வேண்டும் என்றும் அவா்கள் மனுவில் தெரிவித்துள்ளனா்.
முன்னதாக, சிறுவன் ஒருவனுக்கு திருப்பாணாழ்வார் போன்று மாலை அணிவித்து அவரை மற்றறொருவா் தோளில் சுமந்து சென்றும், பெண்கள் கைகளில் அகல்விளக்குகளை ஏந்தியும் வந்தனா்.