செய்திகள்

திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தில் இன்று முதல் வஸ்திரங்கள் ஏலம்

தினமணி

நிலுவையில் உள்ள பயன்படுத்தாத வஸ்திரங்கள், திருமலை - திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திங்கள்கிழமை (23-ஆம் தேதி) முதல் வரும் 30-ஆம் தேதி வரை மின்னணு முறையில் ஏலம் விடப்பட உள்ளன.
தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டு, பயன்படுத்தாமல் நிலுவையில் உள்ள வஸ்திரங்களை விசாகப்பட்டினத்தில் உள்ள எம்.எஸ்.டி.சி நிறுவனம் மூலம் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. 
அதன்படி, 23-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 291 லாட் வஸ்திரங்களும், அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 23ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 283 லாட் வஸ்திரங்களும் ஏலம் விடப்பட உள்ளன. 
அதன்படி, பட்டு, பருத்தி, பாலியஸ்டர் புடவைகள், வேட்டிகள், உத்திரியங்கள், டர்க்கி டவல், லுங்கிகள், சால்வைகள், படுக்கை விரிப்பு, தலையணை விரிப்பு, ஆயத்த ஆடைகள், திரைச்சீலைகள், உண்டியலுக்கு கட்டப்படும் துணிகள், பவித்ரங்கள், ஜாக்கெட் பிட் உள்ளிட்டவை ஏலத்தில் வைக்கப்பட உள்ளன. 
இந்த ஏலத்தில் விருப்பம் உள்ளவர்கள் பொது மேலாளர் (ஏலம்) அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 0877-2264429 அல்லது 2264221 ஆகும். மேலும், www.mstcecommerce.com, www.mstcindia.co.in, www.tirumala.org ஆகிய இணையதளங்களைப் பார்வையிடலாம் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT