செய்திகள்

கிரகண நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் வெளியே செல்லக்கூடாது என்று சொல்வது ஏன்? 

DIN

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் இன்று இரவு நிகழவுள்ளது. இந்த முழு சந்திர கிரகணம் 103 நிமிஷங்கள் தொடர்ந்து நீடிக்கும் அபூர்வ சந்திர கிரகணம். 

இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை (இன்று) இரவு 11.54 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகிறது. பின்னர் முழு சந்திர கிரகணம் சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்குத் தொடங்கி அதிகாலை 2.43 மணிக்கு முடிகிறது. தொடர்ந்து பகுதி சந்திர கிரகணம் அதிகாலை 3.49 மணிக்கு நிறைவடையும். இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் உள்ளவர்களும் கண்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இதில் சந்திரன் மறைக்கப்படும் போது சந்திர கிரகணமும், சூரியன் மறைக்கப்படும்போது சூரிய கிரகணமும் நிகழ்கிறது. பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும், அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் ஏற்படுகிறது. 

சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும். 

கிரகண காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் வெளியே செல்லக்கூடாது ஏன்? 

கிரகணம் நிகழும் பொழுது மக்களை விட, கர்ப்பிணிப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள். கர்ப்பிணிப் பெண்கள் கிரகண நேரத்தின் போது வெளியே சென்றால் அவருக்கும் அவரது குழந்தைக்கும் பாதிக்கக் கூடியதாக சில கதிர் வீச்சுகள் தாக்கக்கூடும். இதனால் பிறக்கும் குழந்தை குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. பிரசவ காலத்தில் தாய்க்கும் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. 

இதனை ஆராய்ந்து தான் சாஸ்திரங்கள் கிரகண காலத்திற்கென சில நியதிகளை வகுத்துள்ளன. இவற்றில் முக்கியமானவை கர்ப்பிணிப் பெண்களுக்குரியவை தான். 

கிரகண காலம் முடியும் வரை அறையை விட்டு வெளியே வரக்கூடாது, நகம் வெட்டக்கூடாது, எந்த வேலையும் செய்யாமல் தெய்வ சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கர்ப்பிணிப் பெண்கள் இதைப் பின்பற்றலாமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT