செய்திகள்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.50 கோடி

தினமணி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.50 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்த பின் தங்களால் இயன்ற காணிக்கைகளை உண்டியல் மூலம் செலுத்தி வருகின்றனர். அதன்படி சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையைக் கணக்கிட்டதில் மொத்தம் ரூ.350 கோடி வசூலானது. 
ரூ.2 லட்சம் நன்கொடை 
ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் தங்களால் இயன்ற நன்கொடையை அளித்து வருகின்றனர். அதன்படி ஞாயிற்றுக்கிழமை ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது. 

புகார் அளிக்க...
திருமலையில் பக்தர்கள் தங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து புகார் அளிக்க 18004254141 என்ற டோல் ப்ரீ எண் மற்றும் 9399399399 என்ற தேவஸ்தானத்தின் வாட்ஸ் ஆப் எண் உள்ளிட்டவற்றை தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் உடனுக்குடன் தீர்வு காண எப்.எம்.எஸ் என்ற ஹெல்ப் லைன் சேவையை தேவஸ்தானம் தொடங்கி உள்ளது. இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஊழியர்கள் உரையாற்றுவர்.
சிறிய பிரச்னைகளை ஊழியர்களும், பெரிய பிரச்னைகளை அதிகாரிகளும் உடனுக்குடன் அறிந்து தீர்வு காண்பர். அதற்காக பக்தர்கள் 1800425111111 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

SCROLL FOR NEXT