செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

DIN

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் இன்று காலை ஆனித் திருமஞ்சன தரிசனம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்று வந்தது. கடந்த திங்கள்கிழமை தங்க கைலாச வாகனத்தில் வீதி உலாவும், செவ்வாய்க்கிழமை தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெற்றன .
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் புதன்கிழமையான நேற்று நடைபெற்றது. 

ஆனித் திருமஞ்சனத்தையொட்டி இன்று சூரிய உதயத்துக்கு முன்பாக அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. 

பின்னர், காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித் சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 

வெள்ளிக்கிழமை பஞ்ச மூர்த்திகள் முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT