செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஆனி வருஷாபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. 

DIN

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஆனி வருஷாபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான வருஷாபிஷேகம் இன்று நடைபெற்றது. 

இதற்காக, இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 4.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், கும்பங்கள் வைக்கப்பட்டு யாக பூஜையும் நடைபெற்றது. 

தொடர்ந்து, காலை 8.30 - 9.00 மணிக்குள் வருஷாபிஷேகம் நடைபெற்றது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு இன்றிரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

பிபிஎல்: முதல் அரைசதத்தை பதிவுசெய்த பாபர் அசாம்!

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

SCROLL FOR NEXT