செய்திகள்

குந்தீஸ்வரர் கோயில் உழவாரப்பணி

DIN

மதுராந்தகம் தாலுகா தர்மாபுரம் ஊரில் உள்ள வேதநாயகி ஸமேத குந்தீஸ்வரர் கோயிலில் 11.03.2018, ஞாயிறு அன்று சென்னையில் உள்ள அண்ணாமலையார் அறப்பணிகுழுவினரால் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.

மிகப் பழமை வாய்ந்ததும், குந்தி தேவி வழிபட்டதுமான இந்த கோவிலின் மேல் வளர்ந்திருந்த மரங்களையும், பிரகாரத்தைச் சுற்றி உள்ள புதர்களையும் கோவில் கட்டடதிற்கு பாதிப்பிலாமல் அகற்றப்பட்டு பூச்செடிகளும் நடப்பட்டது. சன்னதியைச் சுத்தம் செய்து கோலமிடப்பட்டது. 

இந்த உழவாரப்பணியில், தண்டலத்தில் உள்ள ராஜலக்ஷ்மி பொறியியல் கல்லூரியிலிருந்து NSS மாணவர்கள்  100 பேர், பேராசிரியர் திரு ஆனந்தராஜ் தலைமையில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

தொண்டர்களுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்த சிவாச்சாரியார் திரு ஐயப்பன், நிறைவாக சுவாமிக்கு பூஜை செய்து அனைவருக்கும் பிரசாதம் விநியோகித்ததுடன் அன்றைய பணி நிறைவுற்றது.

- ராமசந்திரன் -9884080543
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT