செய்திகள்

நவராத்திரி விழாவை முன்னிட்டு வைஷ்ணவி தேவி கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் 

தினமணி


ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரெசாய் மாவட்டத்தின் கத்ரா என்ற ஊரில் உள்ள வைஷ்ணவ தேவி குகைக்கோயில் சைத்ர (வசந்த) நவராத்திரி விழா விமரிசையாக தொடங்கியது. 

வட இந்தியாவில் போற்றப்படும் வழிபாட்டுத் தலங்களில் இதுவும் ஒன்று. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5,200 அடிகள் உயரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் பக்தர்கள் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு அன்னையின் அருள் வேண்டி வருகின்றனர். 

இந்நிலையில் அருள் தரும் அம்மனுக்கு உகந்த பண்டிகையான நவராத்திரி விழா நேற்று தொடங்கி அடுத்த 9 நாட்களுக்கு நடைபெறும். நவராத்திரி விழாவை முன்னிட்டு வைஷ்ணவி தேவி கோயிலுக்கு திரளான பக்தர்கள் வந்து வைஷ்ணவி தேவியை தரிசனம் செய்தனர். விழாவைப் பல மாநிலத்தில் இருந்து மக்கள் கூட்டம் குவியத் தொடங்கியுள்ளனர். 

பக்தர்கள் பாதுகாப்புக்காக வைஷ்ணவ தேவி கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT