செய்திகள்

திருப்பரங்குன்றம் பங்குனிப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

DIN

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனிப் பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் பங்குனிப் பெருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டுக்கான பங்குனிப் பெருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் சன்னதியிலிருந்து மேள தாளங்கள் முழங்க சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். 
அங்கு தங்க முலாம் பூசப்பட்ட கம்பம் தர்பை புல், மா இலை, சந்தனம், குங்குமம் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. முன்னதாக கம்பத்திற்கு பால், இளநீர், சந்தனம் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. 
இதைத்தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க காலை 10.38 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. 
விழாவையொட்டி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி தினமும் காலையில் தங்க பல்லக்கிலும், மாலையில் தங்கமயில், வெள்ளி பூத வாகனம், பச்சைக் குதிரை, சேஷ வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 26 -ஆம் தேதி கைபார விழா, 30 -ஆம் தேதி பங்குனி உத்திரமும், 31-ஆம் தேதி சூரசம்ஹார லீலையும் நடைபெறும். அதைத்தொடர்ந்து ஏப்ரல் 1 -ஆம் தேதி பட்டாபிஷேகமும், ஏப். 2 -ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், ஏப். 3-ம் தேதி தேரோட்டமும், ஏப். 4-ம் தேதி தீர்த்த உற்சவமும் நடைபெறும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்

ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாட்டு: நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்

பணம் பறித்த இருவரை அடைத்து வைத்து கொலை மிரட்டல்: இருவா் கைது

தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT