செய்திகள்

இந்த நட்சத்திரக்காரர்கள் வெற்றிக்காக கடுமையாக உழைப்பவர்கள்......!

தினமணி

பூரட்டாதி நட்சத்திரத்தின் ராசி கும்பம் மற்றும் மீனத்தில் வரும். இந்த நட்சத்திரத்தின் அதிபதி ராகு. நட்சத்திரத்தின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பாதத்தின் ராசி அதிபதி (கும்பம்) சனி. பூரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தின் ராசி அதிபதி (மீனம்) குரு ஆவார். 

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணநலன்கள்

சில சமயம் சமாதானப் பிரியர். பலசமயம் சண்டை பிரியர்கள் இவர்கள். செய்கை எப்போதும் விநோதமாக இருக்கும். மற்றவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருக்கும்.

கொள்கைப் பிடிப்பு  உள்ளவர்களாக இருந்தாலும், அடிக்கடி சஞ்சலத்திற்கு உள்ளாவதுண்டு. சம்பிரதாயங்களில் அதிக நாட்டம் இருக்காது, தங்களுக்கு வேண்டியவர்களுக்காக எதையும் செய்யும் மனப்போக்கு உள்ளவர்கள். இவர்கள் வாழ்க்கையில் வசதி வாய்ப்பு எப்படியும் வந்துவிடும். தேவைக்கு அதிகமாகத் தேடி அலைகிற குணம் இல்லை.  இவர்கள் பிறவி புத்திசாலியாக இருப்பதால் எந்த வேலையில் இருந்தாலும் பிரகாசிக்க கூடியவர்கள்.

அழகான மற்றும் சாதுரியமான பேச்சுகளால் அனைவரையும் கவரக்கூடியவர்கள். எதிர்கால திட்டங்களில் மிகுந்த கவனம் கொண்ட இவர்கள், எதிர்கால தேவைகளுக்கான சேமிப்பில் விருப்பம் உள்ளவர்கள். வெற்றிக்காக கடுமையாக போராடக்கூடியவர்கள். எண்ணிய செயலை முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். 

வாதம் செய்வதில் வல்லவர்களான இவர்கள் யாரேனும் வசைச் சொற்களை பேசினால் பொங்கி எழுந்துவிடுவர். கல்வி வேள்வியில் ஞானம் உள்ள இவர்கள் எழில் உடையவர்கள். ஆன்மிக ஈடுபாட்டில் விருப்பம் கொண்டவர். பிறரின் மனதை அறிந்து செயல்படக்கூடியவர்கள். எளிதில் எல்லோரிடமும் பழகக்கூடிய குணம் கொண்டவர். 

இந்த  நட்சத்திரத்திரகாரர்ளுக்கு  குழந்தை பிறந்த பிறகு, அப்பாவின் அந்தஸ்து அதிகரிக்கும். இவர்கள் இளமைக் காலம் தொட்டே வளர்ச்சிப்  பாதையில் பயணிப்பார்கள். 25 முதல் 30 வயது வரை குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு முன்னேற்றம் இருக்கும். பின் 40 வயதுக்கு மேல் பொன்னான காலமாக அமையும். குடும்ப வாழ்க்கையில் அன்பு, அரவணைப்பும் இருக்கும். உதாரண தம்பதிகளாக இருப்பார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT