செய்திகள்

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் பல்லக்கு உற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

தினமணி

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர் திருவிழா இன்று நடைபெற்றது. 

இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாத பெருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அந்தவகையில், இந்தாண்டு 10 நாட்கள் நடைபெறும் பங்குனி பெருவிழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 31-ம் தேதி வரை நடக்க உள்ளது.

விழாவில் முக்கிய நிகழ்வாக இன்று பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. பல்லக்கில் பவனி வந்து, கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று அதிகாலை 4.30 மணிக்கு கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருளினார். காலை 6.00 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. 

நாளை காலை திருஞானசம்பந்தர், எலும்பை பூம்பாவையாக்கி அருளுதல் நிகழ்ச்சி நடைபெறும். அதனையொட்டி மாலை வெள்ளி விமானத்தில் இறைவன், அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் திருக்காட்சி அருளும் நிகழ்ச்சி நடைபெறும். 

மார்ச் 31-ம் தேதி தீர்த்தவாரி உற்சவம் புன்னை மரத்தடியில் சிவ வழிபாடும், அன்று மாலை திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் இறுதிச் சடங்கு: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு?

பாலியல் வன்கொடுமை : இளைஞா் கைது

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளைக் கைவிட்ட காங்கிரஸ்: நிா்மலா சீதாராமன்

எண்ணூா் ஆலையை தடையில்லா சான்று பெற்ற பிறகே திறக்க வேண்டும்: தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவு

SCROLL FOR NEXT