பங்குனி உத்திரத்தில் சம்பந்தர் நிகழ்த்திய அதிசயம்!
பங்குனி உத்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் மற்றொரும் கதையும் உள்ளது. ஆன்மிக அன்பர்கள் அதை தெரிந்துகொள்ளவேண்டாமா?
பங்குனி உத்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் மற்றொரும் கதையும் உள்ளது. ஆன்மிக அன்பர்கள் அதை தெரிந்துகொள்ளவேண்டாமா?
அது தான் திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்த கதையாகும்! மயிலாப்பூரில் சிவநேசர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் தீவிரமான சிவபக்தர். அவருக்கு பூம்பாவை என்ற மகள் இருந்தாள். ஞானசம்பந்தர் சுவாமிகளின் மகிமையை அறிந்து அவருக்கு தனது மகளை மனம் முடித்துக்கொடுக்க வேண்டும் என்பது சிவநேசரின் எண்ணமாக இருந்தது. ஆனால் விதி வேறு விதமாக விளையாடியது.
ஒருநாள் பூப்பறிப்பதற்காக பூந்தோட்டத்திற்குச் சென்ற பூம்பாவையை பாம்பு தீண்டிவிட, பூம்பாவை இறந்துவிட்டாள். மிகவும் வருத்தமுற்ற சிவநேசர் மகளின் உடலை தகனம் செய்து எலும்மையும் சாம்பலையும் சேமித்து வைத்தார். ஞானசம்பந்தர் மயிலாப்பூர் வந்திருந்த வேளையில் இதுபற்றி அறிந்தார். அவர் உடனடியாக எலும்பு, சாம்பல் அடங்கிய குடத்தை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் தலத்திற்கு கொண்டு வரும்படி சிவநேசரை கேட்டுக்கொண்டார்.
Advertisement
அன்றைய தினம், கபாலீஸ்வரர் உற்சவ தினத்தின் 9-ம் நாள் கபாலீஸ்வரருக்கு திருமண மகோற்சவ தினம். அன்றைய தினம் இறைவனிடம் பூம்பாவைக்காக பதிகம் பாடி உயிர் பெறச் செய்தார். அவர் பதிகம் பாடிய தினம், மகிமை வாய்ந்த பங்குனி உத்திர தினமாகும்.