செய்திகள்

உஜ்ஜைனி மஹாகாலேஸ்வருக்கு இனி ஆர்.ஓ தண்ணீரில் அபிஷேகம்!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான உஜ்ஜைனி மஹாகாலேஸ்வர்....

DIN

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான உஜ்ஜைனி மஹாகாலேஸ்வர் கோயிலில் ஜலபிஷேகம் செய்வதற்கு வழக்கமான தண்ணீருக்கு பதிலாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் (RO water)இன்று முதல் வழங்கப்படுகிறது. 

பிரசித்தி பெற்ற ஜோதிர் லிங்கமான உஜ்ஜைனி மஹாகாலேஸ்வர் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சாதாரண தண்ணீரில் அபிஷேகம் செய்வதால் லிங்கத்தின் புனிதத் தன்மை பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. 

இந்நிலையில், புராதன லிங்கத்தைப் பாதுகாப்பது குறித்து கோயில் நிர்வாக மேலாண்மை குழு கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. ஆனால், கோயில் நிர்வாகக் குழு பரிந்துரைக்கப்படும் புதிய வழிபாட்டு விதிமுறைகளில் உச்ச நீதிமன்றம் குறுக்கிடாது எனத் தீர்ப்பளித்தது. 

இதையடுத்து, லிங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் அபிஷேகத்திற்கு வழங்கப்படும் சாதாரண தண்ணீருக்கு பதிலாக சுத்திகரிப்பட்ட RO தண்ணீர் இன்று முதல் வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ஜல அபிஷேகம் செய்வதற்கு குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு நபருக்கு 500 மி.லிட்டர் தண்ணீர் வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT