செய்திகள்

அக்னி நட்சத்திரத்தையொட்டி வரும் 28 வரை அருணாசலேஸ்வரருக்கு தாராபிஷேகம்

அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு வரும் 28-ம் தேதி தாராபிஷேகம் நடத்தப்படுகிறது. 

DIN

திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு வரும் 28-ம் தேதி தாராபிஷேகம் நடத்தப்படுகிறது. 

கத்திரி வெயில் நேற்று தொடங்கியதையடுத்து அருணாசலேஸ்வரரின் திருமேனியைக் குளிர்விக்கும் வகையில், நேற்று முதல் இந்த அபிஷேகம் செய்யப்படுகிறது. இதையொட்டி தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுவாமி கருவறையில் தாரா பாத்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த தாராபாத்திரத்தில் வெற்றிவேர், சந்தனம், ஜவ்வாது உள்ளிட்ட வாசனை திரவியங்கள் போடப்பட்ட புனித நீர் துளி துளியாய் லிங்க திருமேனியில் விழுந்துகொண்டே இருக்கும் படி செய்துள்ளனர். 

இதனால், லிங்கத் திருமேனி குளிர்ச்சியடையும் என்று நம்பப்படுகிறது. அக்னி நட்சத்திரத்தின் நிறைவாக சிறப்பு யாகம் நடத்தப்பட உள்ளது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அருணாசலேஸ்வரர் கோயிலிலும் இதேப் போன்று தாரா பாத்திரம் பொருத்தப்பட்டது. 

அருணாசலேஸ்வரர் கோவிலில் தாராபிஷேகம் நடைபெறுவதால் வழக்கமான வழிபாடுகள் மற்றும் தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிப்பதில் எந்த மாற்றமும் இல்லை எனக் கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT