செய்திகள்

குமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

தினமணி

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.தேவசம் தந்திரி சஜித் சங்கரநாராயணரு கொடியேற்றினார். 
காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு சமயஉரை, 8 மணிக்கு பக்தி இன்னிசை, 9 மணிக்கு தேவி பூப்பந்தல் வாகனத்தில் வீதியுலா ஆகியன நடைபெற்றன. 
தேரோட்டம்: 9-ஆம் நாள் திருவிழாவான 27-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, காலை 8 மணியளவில் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறும். 
12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு சமயஉரை, மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி, இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரி, 9 மணிக்கு வெள்ளிக்கலைமான் வாகனத்தில் தேவி திருவீதி உலா ஆகியன நடைபெறும்.
தெப்பத் திருவிழா: 28-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9 மணிக்கு அம்மன் ஆராட்டுக்கு எழுந்தருளல், 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு மண்டகப்படி, 6 மணிக்கு சமயஉரை, இரவு 7.30 மணிக்கு நர்த்தன பூஜை, 9.30 மணிக்கு அம்மன் தெப்பத்துக்கு எழுந்தருளி தெப்பத் திருவிழா நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT