செய்திகள்

கர்நாடகாவில் ஒரே கட்டடத்தில் இருவேறு மதக்கடவுள்கள்: ஒற்றுமையாக வழிபடும் மக்கள்!

தினமணி

கர்நாடகாவில் சிக்பலாப்பூர் மாவட்டத்தில் இந்து, முஸ்லீம் மதங்களைச் சார்ந்த மக்கள் தாங்கள் வழிபடும் தெய்வ சிலைகளை ஒரே கட்டடத்தில் வைத்து வழிபடுகின்றனர். மத நல்லிணக்கத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த ஆலயம் செயல்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

கர்நாடகாவில் பேஜ்பள்ளி என்ற இடத்தில் இஸ்லாமியர்களும், இந்துக்களும் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கென ஒரு வழிபாட்டுத் தளத்தை வடிவமைத்து, அதில் அனுமன், ராமர் போன்ற இந்து கடவுள்களை அமைத்தனர். அதே கட்டடத்தில் இஸ்லாமியர்கள் வழிபடக்கூடிய தொழுகை அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்து கோயிலும், மசூதியும் ஒரு சேர கலவையாக இந்தக் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை அப்பகுதி மக்கள் கோயில்-மசூதி என்றே அழைக்கின்றனர். 

இந்தப் பகுதியில் உள்ள இஸ்லாமியர்களும், இந்துக்களும் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பைப் பரிமாறிக்கொள்கின்றனர். இந்து பண்டிகையான விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விழாக்கள் வரும் போது இஸ்லாமியர்கள் அசைவ உணவை எடுத்துகொள்ளமாட்டார்களாம். அதேபோன்று ரம்ஜான் உள்ளிட்ட இஸ்லாமியர்களின் பண்டிகையை இந்துக்களும் சேர்ந்து கொண்டாடுவதாக தெரிவித்துள்ளனர்.  

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள அபூபக்கர் சித்திக் கூறுகையில், எங்களுக்குள் எந்தவித மத வேறுபாடும் இதுவரை ஏற்பட்டதில்லை. இந்து பண்டிகையான ராம நவமி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் இஸ்லாமியர்களும் இணைந்து வழிபாடு நடத்துவோம் என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரோடா வங்கி நிகர லாபம் ரூ.4,886 கோடியாக உயா்வு

மாா்ச்சில் சரிவைக் கண்ட தொழிலக உற்பத்தி

விளையாட்டு விடுதி மாணவா்கள் சோ்க்கைக்கு தோ்வுப் போட்டிகள்

மன நல மையத்தில் சிகிச்சை பெற்றவா் தற்கொலை

மதுரை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைவது எப்போது?

SCROLL FOR NEXT