செய்திகள்

காசி, ராமேஸ்வரம் எல்லாம் அப்பறம் தாங்க! முதல்ல இதைச் செய்யுங்க! 

DIN

நீங்கள் செய்யும் எந்தொரு காரியமும் வெற்றியில் முடிய வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் காலை இதைத் தவறாமல் செய்யுங்கள், அப்பறம் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். 

எந்த விஷயங்கள் தொடங்கினாலும் நமது முன்னோர்களை வணங்கிவிட்டு, அதன்பின்பு அந்தக் காரியத்தை தொடங்கினால் காரிய வெற்றி உண்டு. கடவுள் இருக்கிறார் இல்லை என்பது விவாதமாகும். ஆனால் முன்னோர்கள் வாழ்ந்தார்கள் என்பதும் அவர்கள்தான் நமக்கு ஆதாரம் என்பதையும் நாம் மறக்கலாகாது. எனவே தினமும் காலை எழுந்தவுடன் முன்னோர்களை நினைத்து ஒரு நிமிடம் வேண்டுவது நம் வாழ்வில் வசந்தத்தை வரவழைக்கும்.

முன்னோர்கள் வழிபாடு என்றவுடன் நாம் அமாவாசை வழிபாட்டையோ அல்லது திதி வழிபாட்டையோ அல்லது தர்ப்பணத்தையோ நினைக்கக் கூடாது. முன்னோர்கள் வழிபாடு என்பது நாம் அவர்களை நினைத்து மனமுருக வேண்டுவது. அவ்வளவே. 

மனமுருக வேண்டுவது என்பதற்கு பிறகுதான் காசி, ராமேஸ்வரம், திரிவேணி சங்கமம் வழிபாடு எல்லாமே. முன்னோர்களை திட்டிக் கொண்டே மேற்சொன்ன க்ஷேத்திரங்களுக்கு சென்றால் எந்தப் பலனும் கிடைக்காது.

ஒரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். முன்னோர்கள் நமக்கு எப்போதும் நன்மை மட்டுமே செய்வார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT