செய்திகள்

கேரளா நாகராஜா கோயிலில் ஆயில்ய விழா இன்று தொடக்கம்

DIN

கேரளா மண்ணாரசாலை அருகே அமைந்துள்ள நாகராஜா கோயிலில் இந்த ஆண்டு ஆயில்ய விழா இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. 

ஹரிப்பாடு, மண்ணரரசாலை நாகராஜா கோயிலில் ஐப்பசி மாத ஆயில்ய திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்தக் கோயிலில் உருளி கவிழ்த்தல் வழிபாடு நடத்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். 

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் இந்த ஆண்டு ஆயில்ய விழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 3 மணிக்கு நாகராஜா விருது வழங்கும் விழா, மகா தீப காட்சிகள், மோகினியாட்டம் போன்றவை நடைபெறும். 

நாளை நாகராஜாவிற்கும், சர்ப்பயக்ஷியம்மாவுக்கும் திருவாபரணம் சார்த்தி நிவேதனம் நடத்தப்படும். நாளை மறுநாள் பாகவத பாராயணம், மாலையில் சங்கீத கச்சேரி போன்றவை நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை: கவிதாவின் காவல் மே 14 வரை நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT