செய்திகள்

பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான இன்று அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம் 

தினமணி

திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான இன்று அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வருகிறார். 

திருமலையில் கடந்த 13-ம் தேதி மாலை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் 5-ம் நாளான திங்கள்கிழமை காலை மலையப்ப சுவாமி தாயாரின் அவதாரமான மோகினி அவதாரத்தில் பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தார். 

திருவில்லிபுத்தூரில் இருந்து வந்த ஆண்டாள் மாலை, ஜடை, கிளி உள்ளிட்டவை மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டன. நேற்றிரவு மகாவிஷ்ணுவின் வாகனமான கருடன் மீது கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகக் கருதப்படும் மலையப்ப சுவாமி வலம் வருவதைக் காண பக்தர்கள் ஆவலுடன் காத்திருப்பது வழக்கம். அதன்படி கருவறையில் உள்ள ஏழுமலையானுக்கு சகஸ்ர காசுமாலை, லஷ்மி ஹாரம் மகரகண்டிகை உள்ளிட்டவற்றை அணிந்தபடி மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் கம்பீரமாக மாடவீதியில் வலம் வந்தார். கருட சேவையைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

இதைதொடர்ந்து ஆறாம் நாளான இன்று அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாடவீதியில் வலம் வருகிறார். இன்று இரவு யானை வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம் வருவார். திருமலையில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அங்குத் திரண்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

SCROLL FOR NEXT