செய்திகள்

திருவல்லீஸ்வரர் திருக்கோயிலில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை

சென்னை, பாடியில் உள்ள அருள்மிகு ஜெகதாம்பிகை சமேத அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயிலில்

DIN


சென்னை, பாடியில் உள்ள அருள்மிகு ஜெகதாம்பிகை சமேத அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயிலில் குருபெயர்ச்சி இலட்சார்ச்சனை மற்றும் பரிகார பூஜை நடைபெறுகின்றது. 

தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற 32 சிவாலயங்களில் ஒன்றானதும், வியாழ குரு வழிபட்டு பாவ நிவர்த்தி பெற்றதன் காரணமாக குருஸ்தலம் எனப் பெயர் பெற்றது. தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர் மற்றும் அருணகிரிநாதர் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் மற்றும்பாம்பன் சுவாமிகள் உள்ளிட்ட அருளாளர்களால் பாடப் பெற்ற முக்கிய குரு ஸ்தலங்களில் ஒன்றாக விளங்குகின்றது. 

இத்திருக்கோயிலில் புரட்டாசி மாதம் 18-ம் நாள் 04.10.2018 வியாழக்கிழமையன்று அருள்மிகு குருபகவான் துலாம் ராசியிலிருந்து இரவு 10.00 மணியளவில் விருச்சிகம் ராசிக்குப் பெயர்ச்சியாவதை முன்னிட்டு குருபகவானுக்கு குருபெயர்ச்சி இலட்சார்ச்சனை விழா மூன்று நாட்களுக்கும் (03.10.2018, 04.10.2018, 05.10.2018 ) மற்றும் குரு பரிகார ஹோமம் 05.10.2018 அன்று காலை 8.00 மணி முதல் 1.00 மணி வரை மற்றும் 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. 

பக்தர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டு, குருபகவான் அருளைப் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

குரு பரிகார சாந்தி செய்துகொள்ள வேண்டிய ராசிக்காரர்கள் - மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் 

குருபெயர்ச்சி இலட்சார்ச்சனை - ரூ.400/-

குருபரிகார ஹோமம் - ரூ.1000/-
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT