செய்திகள்

திருமலையில் குடியரசு துணைத் தலைவர்

DIN


திருப்பதியில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருமலைக்கு வந்தார்.
திருப்பதியில், மத்திய அரசின் சுற்றுலாத்துறை சார்பில், ரூ.100 கோடி செலவில், இந்திய சமையல் கலைக் கல்வி நிறுவனம் கட்டப்பட்டது. இதை, வெங்கய்ய நாயுடு திங்கள்கிழமை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
அதன் பின், வெங்கய்ய நாயுடு திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர். அவருக்கு தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் ஆகியவற்றைச் செய்தனர். இரவு திருமலையில் தங்கிய அவர் செவ்வாய்க்கிழமை காலை ஏழுமலையானை தரிசிக்க உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT