செய்திகள்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம்

DIN

புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பாலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையன்றும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு காலை 10 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் செய்விக்கப்பட்டது. 

11.00 மணியளவில் நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், 10008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. 

மதியம் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்கார அபிஷேகத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT