செய்திகள்

பொன்னக் கால்வாய் உற்சவம்

DIN


திருப்பதியில் உள்ள கோவிந்தராஜர் கோயிலில் சித்ரா பௌர்ணமியை ஒட்டி பொன்னக் கால்வாய் உற்சவம் நடைபெற்றது.
கோடைக் காலம் தொடங்கியவுடன் உற்சவர்களின் உஷ்ணத்தை தணிக்க உற்சவங்களை நடத்துவது ஐதீகம். அதன்படி திருப்பதியில் உள்ள கோவிந்தராஜர் கோயிலில் சித்ரா பௌர்ணமியை ஒட்டி பொன்னக் கால்வாய் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜர், ஆண்டாள் சமேத ஸ்ரீகிருஷ்ணர், சேனாதிபதி விஸ்வக்சேனர் உள்ளிட்ட உற்சவர்கள் காலை 5.30 மணிக்கு திருப்பதியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள பொன்னக் கால்வாய் என்ற பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். 
அங்குள்ள கால்வாயில் அமைக்கப்பட்ட ஊஞ்சலில் உற்சவர்களை அமர்த்தி, காலை 8 முதல் 10 மணி வரை அர்ச்சகர்கள் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தினர். அதன்பின் அலங்காரம், சேவாகாலம், சாத்துமுறை உள்ளிட்டவை நடைபெற்றன. மாலை 4.30 முதல் 5.30 மணி வரை மண்டபத்தில் ஊஞ்சல் சேவையும் நடத்தப்பட்டது. இந்த வழிபாட்டில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். 
மாலையில் உற்சவர்கள் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வழியாக கோவிந்தராஜர் கோயிலுக்கு திரும்பி வரும்போது, பத்மாவதி தாயார் சந்நிதியின் கதவு ஒருபக்கம் மட்டும் சாத்தப்பட்டது. பத்மாவதி தாயார் ஏழுமலையானின் அண்ணனான கோவிந்தராஜரை மூடிய கதவு வழியாக மரியாதையுடன் பார்த்ததாக கூறப்படுவதால் இந்த ஐதீகம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT