செய்திகள்

வருடாந்திர வசந்தோற்சவம் நிறைவு

DIN


திருமலையில் நடைபெற்று வந்த வருடாந்திர வசந்தோற்சவம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.
ஏழுமலையான் கோயிலில் உற்சவர்களுக்கு கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்க கடந்த 2 நாள்களாக வசந்தோற்சவம் நடந்து வந்தது. அதன் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை மதியம் கோயிலுக்குள் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சீதா லட்சுமண ஆஞ்சநேய சமேத கோதண்டராமர், ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் உள்ளிட்ட உற்சவர்கள் தங்கப் பல்லக்கில் கோயில் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள வசந்த மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். 
அங்கு அவர்களை தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து அர்ச்சகர்கள் ஸ்நபன திருமஞ்சனத்தை  நடத்தினர். 
வசந்தோற்சவத்தை முன்னிட்டு சில ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது. மாலையில் உற்சவர்கள் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அத்துடன் வசந்தோற்சவம் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT