செய்திகள்

வீடு வாங்கும் யோகம் உண்டாகுமாம் இந்த ராசிக்காரர்களுக்கு!

தினமணி


விகாரி ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மேஷ ராசி அன்பர்களுக்கு இந்தாண்டு முழுவதும்  குதுகலமாக இருக்கப்போகிறது. திருமணம், வீடு, நிலம் என வாழ்க்கையில் நடைபெற வேண்டிய முக்கியமான சுப காரியங்கள் அனைத்தும் இனிதே நடைபெறப்போகிறது. 

புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் தேவையான பணம் வந்து கொண்டே இருக்கும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு என்று எதுவும் ஏற்படாது. அவசரமாக முடிக்க வேண்டிய காரியங்களையும் தொடர் வேலைகளுக்கிடையே செய்து முடித்து வெற்றியடைவீர்கள். உடற்பயிற்சி செய்வதில் அக்கறை அவசியம்.

அக்கம்பக்கத்தில் பெருமையுடன் பேசப்படுவீர்கள். மற்றவர்களுக்குப் பயன்படும் படியான பொதுத் தொண்டுகளில் ஈடுபடுவீர்கள். தானதர்மங்களிலும் உங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள். சிலருக்கு புதிய நிலம், வீடு, வாங்கும் யோகம் உண்டாகும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். செய்தொழிலில் எடுத்த வேலைகள் அனைத்தும் சீராய் முடியும்.

புதிய வாய்ப்புகளும் தேடி வரும். சமுதாயத்தில் நல்ல பெயரெடுப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பைச் சுலபமாகப் பெறுவீர்கள். திறமைகளைக் கொண்டு புதிய சாதனைகளைப் படைப்பீர்கள். செயல்களில் நியாயத்தையும் கடைப்பிடிப்பீர்கள். நேர்மறையாகச் சிந்தித்து காரிய மாற்றும் காலகட்டமாக இது அமைகிறது.

ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் எதிரிகளை வாக்கு சாதுரியத்தினால் நயமாகப் பேசி வென்றுவிடுவீர்கள். முகத்தில் புதுப் பொலிவு உண்டாகும். நடையிலும் மிடுக்கு உண்டாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் சிறப்பான அபிவிருத்தியையும் பெறுவீர்கள்.

புதிய முன்னேற்றப் பாதையில் பயணப்படத் தொடங்குவீர்கள். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அவர்களுக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆமை வேகத்தில் நடந்த செயல்கள் அனைத்தும் துரித வேகத்தில் நடக்கத் தொடங்கும். பழையக் கடன்களை முழுவதுமாகத் திருப்பி அடைத்து விடுவீர்கள்.

குடும்பத்தில் அனைத்தும் நிறைந்து குறையொன்றுமில்லை என்கிற அளவுக்கு மகிழ்ச்சி நிலவும். எதிரிகளும் போட்டியாளர்களும் மறைந்து விடுவார்கள். செய்தொழிலை வேறு ஊர்களுக்கும் சென்று விரிவுபடுத்துவீர்கள். அன்னையின் அன்பும் பாசமும் கிடைக்கும். அந்த வழியில் பூர்வீகச் சொத்துகளும் வந்து சேரும். பெற்றோருடன் இணக்கமாக வாழும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உன்னதமான பதவிகளைப் பெறுவார்கள். உங்களுக்கு எதிராக சதி செய்தவர்கள் அடங்கி விடுவார்கள். வருமானம் பலமடங்கு உயரும். இதனால் குடும்பத்தின் தேவைகளை சுலபமாக நிறைவேற்றிக் கொள்வீர்கள். அலுவலகத்தில் சில முக்கிய அதிகாரிகள் உங்களுக்கு கருணை காட்டுவார்கள். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப் படுவார்கள். திறமைகளை வளர்த்துக்கொள்ள தேவையான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக முடியும். கூட்டாளிகள் நட்புடன் பழகுவார்கள். அவர்களுடனான பழைய பிணக்குகளை மறந்து விடவும். அரசு வகையில் சிரமங்கள் ஏதும் வராது. விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் கிடைக்கும். விளைச்சலில் அபிவிருத்தியைக் காண்பீர்கள். உற்சாகமாக பணியாற்றுவீர்கள். கரும்பு பயிர் செய்பவர்கள் நல்ல வருமானத்தைக் காண்பார்கள். பழைய கடன்களிலிருந்து விடுபடுவீர்கள். எதிலும் விழிப்புடன் இருங்கள்.

அரசியல்வாதிகளுக்கு இந்த விகாரி ஆண்டில் சில எதிர்ப்புகள் தோன்றினாலும் கௌரவத்திற்கு அதனால் பங்கம் ஏதும் வராது. எவரிடமும் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். தொண்டர்களிடம் உங்கள் பேச்சுக்கு வரவேற்பு இருக்கும். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். கலைத்துறையினர் உற்சாகமான நிலையுடன் பணியாற்றுவீர்கள். பழைய ஒப்பந்தங்களை நன்றாக முடித்துக்கொடுத்து புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.

கைநழுவிப்போன வாய்ப்புகள் திரும்பக் கிடைக்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.  உழைப்புக்கேற்ற வருமானம் தொடர்ந்து கிடைக்கும். புதிய முயற்சிகளில் கவனத்துடன் ஈடுபடவும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராக இருக்கும். குடும்ப உறவினர்களிடம் உறவு நல்ல முறையில் இருக்கும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உணவு விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். தெய்வ வழிபாட்டைக் கூட்டிக்கொண்டு ஆத்ம பலம் பெறுங்கள். 

மாணவமணிகள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். நல்ல மதிப்பெண்களையும் பெறுவீர்கள். விரும்பிய பாடங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நண்பர்களுடன் சிறுசிறு சலசலப்புகள் தோன்றினாலும் அவைகளால் பெறிய பாதிப்புகள் உண்டாகாது.

பரிகாரம்

மேஷ ராசிக்காரர்கள் "ஜய ஜய துர்க்கா' என்று ஜபித்து துர்க்கையை வழிபட்டு வர வாழ்வில் வசந்தங்கள் உண்டாகும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT