செய்திகள்

பழனியில் ரோப்கார் சேவை இன்று ஒருநாள் மட்டும் நிறுத்தம்!

பழனி மலைக்கோயில் ரோப்கார் பராமரிப்பு பணிக்காக இன்று  ஒருநாள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது.

DIN

பழனி மலைக்கோயில் ரோப்கார் பராமரிப்பு பணிக்காக இன்று  ஒருநாள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் மிகவும் பிரசித்திபெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை இயக்கப்படும் ரோப்கார், தினமும் மதியம் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும்  பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது.

இந்நிலையில், இன்று மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக ரோப்கார் நிறுத்தப்பட்டுள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வின்ச் மற்றும் படிவழிப்பாதையை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சினிமா காதலி... த்ரிஷா!

சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: குடியரசு துணைத் தலைவராகிறார்!

படப்பிடிப்புக்கு முன்பே 70% பின்னணி இசையை முடித்த ஸ்பிரிட் படக்குழு!

கத்தாரில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: ஹமாஸ் தலைவர்கள் பலி?

ஆசியக் கோப்பையில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாததன் காரணம் இதுதானா? அமித் மிஸ்ரா கூறுவதென்ன?

SCROLL FOR NEXT