செய்திகள்

திருமலையில் பாஷ்யக்காரர் உற்சவம் தொடக்கம்

DIN


திருமலையில் ராமாநுஜரைப் போற்றி நடத்தப்படும் பாஷ்யக்காரர் உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
வைணவ மகாகுரு ராமாநுஜரின் ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு திருமலையில் ஆண்டுதோறும் 19 நாள்களுக்கு இந்த உற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி ஏழுமலையான் கோயிலில் பாஷ்யக்காரர் உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அன்று காலை முதல் மணியோசைக்குப் பின் ராமானுஜர் தங்கப் பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தார். இந்த நிகழ்வில் பக்தர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர். வரும் 18-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த உற்சவத்தில் 9-ஆம் தேதி ஸ்ரீபாஷ்யக்காரர் சாத்துமுறை நடக்க உள்ளது. மீமாம்ச கிரந்தம் என்ற நூலுக்கு ஸ்ரீபாஷ்யம் எனப்படும் விளக்க உரையை எழுதியதால் ராமாநுஜரை, வைணவ மரபில் பாஷ்யக்காரர் என்றும் அழைக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT