செய்திகள்

ஆண்டாள் திருக்கல்யாண வைபவத்தையொட்டி அத்திவரதர் தரிசன நேரத்தில் மாற்றம்!

தினமணி

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளதால் அத்திவரதர் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அத்திவரதர் பெருவிழா 34-வது நாளாக நடைபெற்று வருகிறது. வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத் திருநாளன்று ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று அந்த உற்சவம் நடைபெறுகிறது. 

கூடுதலாக, இந்தாண்டு அத்திவரதர் பெருவிழாவும் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அத்திவரதர் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கிழக்கு கோபுர வாசல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்திவரதர் வைபவம் மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டு, ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதன்பின் மீண்டும் 8 மணிக்குப் பிறகு இரவு 10 மணி வரை அத்திவரதரைத் தரிசிக்கலாம்.

மேலும், ஆகஸ்ட் 17-ம் தேதி அத்திவரதர் வைபவம் நிறைவடைவதால் அன்று மாலை 5.00 மணியோடு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT