செய்திகள்

திருமலை: இம்மாதத்துக்கான இலவச முதன்மை தரிசனங்கள்

DIN


திருமலையில் இந்த மாதத்துக்கான இலவச முதன்மை தரிசன தேதிகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.  
 திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாள்கள் மூத்த குடிமக்கள் மற்றும் கைக் குழந்தைகளின் பெற்றோருக்கு இலவச தரிசனம் வழங்கிட  அனுமதியளிக்கிறது. அதன்படி வரும் ஆக.13 மற்றும் ஆக. 27-ஆம் தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் பேர், மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என ஒருநாளைக்கு 4 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  
  அதேபோல் ஆக. 14 மற்றும் ஆக. 28-ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 0-5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது. தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT