செய்திகள்

அத்திவரதர் பெருவிழா: அத்திவரதர் அனந்தசரஸ் திருக்குளத்தில் ஆய்வு

DIN

அத்திவரதர் சனிக்கிழமை எழுந்தருள உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தினையும், பெருமாளின் திருமேனி வைக்கப்படவுள்ள நடவாவி கிணற்றையும் உயர்நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட  இந்துசமய அறநிலையத்துறை வழக்குரைஞர் மகாராஜா,அரசு வழக்குரைஞர் கார்த்திகேயன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வழக்குரைஞர் புருஷோத்தமன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். 

குளத்தில் உள்ள தண்ணீர் சுத்தமானதாக இருக்கிறதா எனவும் கோயில் வளாகத்தில் உள்ள 5 வெவ்வேறு இடங்களில் நீரை பரிசோதித்து மாதிரிகள் எடுத்துக் கொண்டனர்.

பெருமாள் திருமேனி வைக்கப்படவுள்ள நடவாவி கிணற்றுப் பகுதியையும், அனந்தசரஸ் திருக்குளத்திலும் செய்ய வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்து ஏ.டி.ஜி.பி.ஜெயந்த் முரளி, வடக்கு மண்டல ஐ.ஜி.  எஸ்.நாகராஜ் மற்றும் குளம் பாதுகாப்புக்கான எஸ்.பி.ஜெயக்குமார் ஆகியோரும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

அனந்தசரஸ் திருக்குளத்தில் தொடர்ந்து செய்யப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், டிஜிபி ஜே.கே.திரிபாதி ஆகியோர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர். முன்னதாக அனைவரும் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT