செய்திகள்

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அமாவாசை வேள்வி

தினமணி

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் மார்கழி மாத அமாவாசை வேள்வி பூஜையை பங்காரு அடிகளார் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
 மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சித்தர் பீடம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதிகாலை 3 மணிக்கு கருவறை அம்மன் சிலைக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அம்மன் சிலை வெள்ளி கவசத்தால் அலங்காரிக்கப்பட்டது. காலை 9 மணிக்கு சித்தர் பீடம் வந்த அடிகளாருக்கு பாதபூஜை நடத்தப்பட்டது. சித்தர்பீட வளாகம், ஓம்சக்தி பீடத்தின் முன்பு
 பிரமாண்ட யாக சாலை அமைக்கப்பட்டு, அதில் 117 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 முன்பகுதியில் எண்கோண வடிவில் யாக குண்டம் அமைந்துள்ளது.
 மாலையில் இந்த யாக குண்டத்தில் கற்பூரம் ஏற்றி வேள்வி பூஜையை பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலை வகித்தார். ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்களும், இருமுடி ஏந்தி வந்த பக்தர்களும் நீண்ட வரிசையில் வந்து பெரிய யாககுண்டத்தில் நவதானியத்தை இட்டு அம்மனை வழிபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT