செய்திகள்

அருணாசலேஸ்வரர் கோயிலில் உத்தராயண புண்ணியகால உற்சவம் தொடக்கம்

தினமணி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் உத்தராயண புண்ணியகால உற்சவம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் உத்தராயண புண்ணியகால உற்சவமும் ஒன்று. நிகழாண்டுக்கான உத்தராயண புண்ணியகால உற்சவம் ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
 பின்னர், விநாயகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தியம்மன் உள்ளிட்ட உற்சவர் சுவாமிகள் மேளதாளங்கள் முழங்க, கோயில் தங்கக் கொடிமரம் அருகே எழுந்தருளினர். காலை 8 மணிக்கு கோயில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, கோயில் தங்கக் கொடிமரத்தில் உத்தராயண புண்ணியகால உற்சவத்துக்கான கொடியேற்றம் நடைபெற்றது.
 கொடியேற்றத்தைக் காணக் குவிந்த பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழக்கமிட்டபடி வழிபட்டனர்.
 10 நாள்கள் நடைபெறும்: இந்த உற்சவம் தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும்.
 இதையொட்டி, தினமும் காலை, இரவு வேளைகளில் உற்சவர் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வருகிறார். உற்சவ நிகழ்ச்சியின் 10-ஆவது நாளான வரும் 15-ஆம் தேதி திருவண்ணாமலை - தண்டராம்பட்டு சாலையில் உள்ள தாமரைக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இத்துடன் இந்தக் கோயிலின் 10 நாள் உற்சவம் நிறைவு பெறுகிறது.
 விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ரா.ஞானசேகர் மற்றும் கோயில் ஊழியர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

SCROLL FOR NEXT