செய்திகள்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்

தினமணி


மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தெப்பத் திருவிழாவுக்கான கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெப்பத் திருவிழா வாஸ்து சாந்தி பூஜையுடன் புதன்கிழமை தொடங்கியது. அதைத்தொடர்ந்து சுவாமி சன்னதி முன் உள்ள கம்பத்தடி மண்டபத்தில் தெப்பத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. 
இதையொட்டி சுந்தரேசுவரர்-பிரியாவிடை மற்றும் மீனாட்சியம்மன் சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் தீப தூப ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து சிவாச்சாரியர்கள், தங்கக் கொடிக்கம்பத்தில் தெப்பத் திருவிழா கொடியேற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தெப்பத் திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி மற்றும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுவர்.
முக்கிய நிகழ்வான, தெப்பத் திருவிழா ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறுகிறது. 
அன்றைய தினம் காலை 5.30 மணிக்கு, மீனாட்சி அம்மன் அவுதா தொட்டில் வாகனத்திலும், சுவாமி வெள்ளி சிம்மாசனத்திலும் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகள் வழியாக வலம் வந்து அம்மன் சன்னதி, கீழமாசி வீதி, யானைக்கல், நெல்பேட்டை, முனிச்சாலை, காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் சென்றடைகின்றனர். பின்னர் சுவாமி-அம்மன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் காலை 10.05 மணிக்கு எழுந்தருளி தெப்பக்குளத்தில் வலம் வருவர். 
விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், இணை ஆணையர் நா.நடராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT